By clicking the "Sign Up" button, you agree to these Terms of Service.
Login
Course fees :
INR 899
TNPSC Assistant Jailor
Overview
தமிழ்நாடு அரசுத்தேர்வாணையம் - ஜெயிலர் பணியிடங்கள்.
( Tamil Nadu Public Service Commission (TNPSC) - Jailor Posts )
காவல்துறைப் பணியைப் போன்று சிறைத்துறைப் பணியும் சீருடைப் பணியாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 மகளிர் சிறப்பு சிறைகள், 95 கிளை சிறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகள் உள்ளன.
இதில், வார்டர் கிரேடு-2, வார்டர் கிரேடு-1, தலைமை வார்டர், உதவி ஜெயிலர் (உதவி சிறை அதிகாரி), துணை ஜெயிலர், ஜெயிலர், கூடுதல் கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், டிஐஜி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும் அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
சிறைத்துறை நிர்வாக பிரிவில் ஆரம்ப நிலை பதவியான உதவி சிறை அதிகாரி (அசிஸ்டென்ட் ஜெயிலர்) பணியிடங்கள் (நேரடி நியமனம்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகின்றன.
தகுதி அடிப்படையில்
ஜெயிலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது அப்பணியில் காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.
ஜெயிலர் பணிக்கு குறிப்பிட்ட சில உடற்தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தயாராவது எப்படி?
ஜெயிலர் பணிக்கு நல்ல கண் பார்வை அவசியம். தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தலா 300 மதிப்பெண்.