
TNPSC Group VIII Course Pack - TNPSC இந்து சமய அறநிலைத்துறை பணி
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பணி………
இன்றைய பரப்பரப்பான உலகில் பட்டப்படிப்பு படித்தவர்களும், கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்களும் எப்படியாவது அரசுப்பணியில் நாமும் அமர்ந்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கின்றனர்.
அத்தகையோருக்கு அரசுப்பணி பெற TNPSC தேர்வு மட்டுமே உள்ளது என கண்முடித்தனமாக எண்ணி இதை மட்டுமே முயற்சி செய்கின்றார்கள்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் தொகுதி செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர், நிலை 4 ஆகிய பதவிகளுக்கான 2016 & 17-ஆம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர்.
செயல் அலுவலர், நிலை 3-இல் 29 பேரும், செயல் அலுவலர், நிலை 4-இல் 49 பணியிடங்களும் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
செயல் அலுவலர், நிலை 3க்கான எழுத்து தேர்வு இரு தாள்களைக் கொண்டது. இவை 29.04.2017 அன்று காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. செயல் அலுவலர், நிலை 4க்கான இரு தாள்களைக் கொண்டது. இவை 30.4.2017 அன்று காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. இதற்கான தேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 32 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன